DO YOU WANT TO CHANCE LANGUAGE?

வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .
வருகைத்தந்துள்ள தங்களை அன்புடன் வரவேற்கிறேன் .

ஓடும் எழுத்து கலர்

உலக உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள........................ கல்வி கடனுக்கான அரசு இணையதளம்......... RANJITHCRONJE MOVIES TV .....................நீங்கள் கணினியை இயக்கி எத்தனை நிமிடம் ஆகின்றது என அறிய..... உலக முழுவதும் இனி இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப..... வேலைவாய்ப்பு தகவல்களை தேட உதவும் செயலி.......... உங்கள் INTERNET SPEEDயை உடனடியாக அறிந்து கொள்ள...தேசிய கீதங்களுக்கான வெப்சைட்[ NATIONAL ANTHEMS WEBSITE].....மருந்துகளின் சரியான விலையினை அறிய......புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி?.....NOKIA PHONEஇன் மறைமுக எண்கள்.... போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறியவதற்கு

Wednesday, January 16, 2013

குழந்தைகளுக்கான பயனுள்ள தளங்கள்

1.கல்வி விளையாட்டுக்கள், வேடிக்கை யான கேம்ஸ், ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தகவல்கள், கலை அம்சம் நிறைந்த பலவற்றிற்கு 20 ஆயிரத்திற்கு மேலான இணைய தொடர்புகள், வண்ணம் தீட்டி பழக தளங்கள், கணக்கு பழக பயிற்சிகள் மற்றும் டவுண்லோட் செய்து வைத்து விளையாட கேம்ஸ் என அனைத்து வகைகளிலும் குழந்தைகளுக்கான இணையக் களஞ்சியமாக இயங்குகிறது www.links4kids.co.uk என்ற முகவரியில் உள்ள தளம். 

2. நூற்றுக் கணக்கில் இன்டர்நெட் இணைப்பில் விளையாட கேம்ஸ், கார்டூன், மூவி கிளிப்கள், மியூசிக் வீடியோ, புதிர்கள், கற் பனைத் திறனை ஊக்கப்படுத்தும் செயல்பாடுகள், பக்கங்களுக்குக் கலர் தீட்டுதல், பாதுகாப்பான வழிகளில் இணையத் தேடல் என வேடிக்கை விளையாட்டுக்களையும் கல்வி கற்றலையும் இணைத்து தருகிறது www.alfy.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம். 


3. www.surfnetkids.com என்ற தளத்தில் பலவாறான வித்தியாசமான கேம்ஸ், வேடிக்கை விளையாட்டுக்கள், குழந்தைகளுக்கான தகவல்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுத் தர விரும்பும் விஷயங்கள், நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் எனப் பலவகைகளில் குழந்தைகளுக்கான அனைத்து விஷயங்களும் வித்தியாசமான முறையில் தரப்பட்டுள்ளன. 

4. குழந்தைகளுக்கான இணைய தளங்கள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா? அனைத்தையும் தராவிட்டாலும் பெரும்பான்மையான தளங்களைப் பட்டியலிடுகிறது www.kidsites.org என்ற முகவரியில் உள்ள தளம். 

5.குழந்தைகளுக்கு கணக்குகளைத் தந்து அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் தளமாக விளங்குகிறதுwww.coolmath4kids.com உலக அளவில் இது சிறந்த தளம் என்ற பாராட்டினைப் பல அமைப்புகளில் இருந்து பெற்றது. குழந்தைகளுக்கு கூட்டல், கழித்-தலில் தொடங்கி அல்ஜிப்ரா, பின்னங்கள், டெசிமல் கணக்குகள் என கணக்கின் அடிப்-படையையும் அதன் தொடர்பான பிறவற்-றையும் கற்றுத்தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. இவை அனைத்-தும் கணக்கியலை விளையாட்டுக்கள் மூலமும் புதிர்கள் மூலமும் கற்றுத் தருகின்றன. அவற்றின் முகவரிகள்: www.coolmath.comwww.coolmath4kids.comwww.sciencemonster.comwww.spikesgamezone.com . 

6. www.kids.yahoo.com என்ற முகவரியில் இன்னொரு அருமையான குழந்தைகளுக்-கான தளம் உள்ளது. கேம்ஸ், மியூசிக், குறும் திரைப்-படங்கள், ஜோக்ஸ், விளையாட்டுக்கள் மற்றும் படித்துப் பாருங்கள் எனப் பல பிரிவுகளில் இந்த தளம் குழந்தைகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. 
7. உங்கள் குழந்தை, தான் கம்ப்யூட்டரில் விளையாடும் கார்ட்டூன் படங்களையும் மற்ற கேரக்டர்களையும் தன் கம்ப்யூட்டரில் (ஏன், உங்கள் கம்ப்யூட்டரிலும் கூட) திரையில் வைத்துக் கொள்ள விரும்புகிறதா? அல்லது ஹோம் பேஜாக வைத்து இன்டர்நெட்டை இயக்கியவுடன் வர வேண்டும் என விரும்புகிறதா? இத்தகைய ஆவலை நிறைவேற்ற www.hitentertainment.com என்ற தளம் இயங்குகிறது. குழந்தைகள் உலகின் பல கேரக்டர்கள் இங்கு உள்ளன. இந்த கேரக்டர்கள் பங்கு கொள்ளும் சிறிய கதைகள் குழந்தைகளின் மனதில் நல்ல உறுதியை வளர்க்கின்றன.

8. இரண்டு வயதிலிருந்து எட்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான அனைத்து விளையாட்டுக்களையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய தகவல்களையும் தருகிறது www.pbskids.org என்ற முகவரியில் உள்ள தளம். இந்த வகையில் இன்னும் சேர்க்கப்பட வேண்டிய தளங்களாக www.nickjr.com www.uptoten.com www.kidsgames.orgwww.gameskidsplay.net ஆகியவை உள்ளன. 


9. இத்தகைய விளையாட்டுக்களோடு குழந்தைகளுக்கான அடிப்படை அறிவியல் விஷயங்களையும் சேர்த்து விளையாட்டுக்கள் மூலமாகத் தரும் ஓர் இணைய தளம் www.playkidsgames.com இந்த தளத்தில் குழந்தைகள் செயல்படுகையில் பெற்றோர்களும் உடன் இருந்து அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். கம்ப்யூட்டர், மேத்ஸ், பிரச்சி-னைகளைத் தீர்த்து வெற்றிகாணும் வழிகள், படித்து சிந்தித்து தகவல்களைக் கைக் கொள்ளும் வழிமுறைகள் எனப் பல வகைகளில் குழந்தைகளின் பொழுது போக்கும் வழிகளிலேயே நிறைய அறிவு வளர்க்கும் விஷயங்களையும் தருகிறது இந்த தளம். 

10. அனைத்து வயதிலும் உள்ள குழந்தைகளுக்கான தளம் www.funbrain.com என்பது. கேம்ஸ் விளையாடுகையில் குழந்தைகளிடம் தகவல்களைப் பெற்று தொடரும் வகையில் கேம்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொற்களைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பாடத்திட்டத்திற்கேற்ப விளையாட்டுக்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விளையாட்டுக்கள் வடிவமைக்கப்பட்டுத் தரப்படுகின்றன. 


11.  பெண் குழந்தைகளுக்கான தளம் எதுவும் உள்ளதா? என்று வாசகர்கள் கேட்கலாம். இவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் உள்ளது www.everythinggirl.com என்ற தளம். 



வளரும் குழந்தைகள் கம்ப்யூட்டரைச் சாதாரணமாகப் பயன்படுத்தினாலே அவர்களின் சிந்திக்கும் திறன் சீராக்கப்பட்டு கூராகும். இதில் மேலே தரப்பட்டுள்ள தளங்கள் இன்னும் பல படிகள் முன்னேறிச் சென்று பல வழிகளைத் தேர்ந்தெடுத்துத்தருகின்றன. உங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்குப் பழக்குங்கள். கம்ப்யூட்டர் கெட்டுப் போய்விடுமோ என்று தயங்காதீர்கள். அதற்கான பாதுகாப்பு வழிகளைக் கொண்டு அவர்களுக்கும் கம்ப்யூட்டரைக் கற்றுத் தாருங்கள். அவர்களை இழுத்துக் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் மேலே சொல்லப்பட்ட தளங்கள் தருகின்றன. இன்னும் பல தளங்கள் குழந்தைகளுக்கென குவிந்து கிடக்கின்றன. அவற்றையும் நீங்கள் தேடி எடுத்துப் பயன்படுத்தலாம். உங்கள் குழந்தைகளுக்கு இணையத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்களா ? குழந்தைகளுக்கு எப்படி புரியும் ? எந்த இணையதளம் குழந்தைகளுக்காக உள்ளது ? எப்படி குழந்தைகள் இணையத்தை அணுகுவார்கள் ? அதனால் என்ன பயன் ? இப்படி ஏராளமான கேள்விகள் பெற்றோர்களை குழந்தைகளின் இணைய அறிவை ஊட்ட விடாமல் தடுக்கிறது.

http://kidoz.net/ – இந்த இணையத்தளத்தில் kido’s என்ற குழந்தைகளுக்கான Search Engine -ஐ டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டுகள், வீடியோ , படங்கள் எல்லாம் இது கொடுக்கும். இதை குழந்தைகளுக்கு பிடிக்கும் விதத்தில் , நிறத்தில் அமைத்திருகிறார்கள். தேவை இல்லாத படங்கள் , வீடியோ எதுவும் இதில் லோட் ஆவதில்லை. பாதுகாப்பான தளம்.


http://nces.ed.gov/nceskids/ – National Centre for educational statistics என்ற அமெரிக்க அரசின் இணைத்தளம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் கீழ்க்கண்ட பக்கங்களுக்கு உங்கள் குழந்தைகளை கூட்டிசெல்லுங்கள். http://nces.ed.gov/nceskids/createagraph/ – ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் சிறார்களுக்கு இந்த பக்கம் பயனுள்ளதாக இருக்கும்.  நீங்கள் ஒரு பத்திரிக்கை துறையில் அல்லது நிர்வாக துறையில் இருந்தால் இந்த தளம் Graph வரைவதற்கு மிக உதவியாக இருக்கும். )


http://nces.ed.gov/nceskids/eyk/index.asp?flash=false ஆரம்ப பள்ளி, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு இது மிகவும் உதவும் பக்கம். சுருக்கமாக சொன்னால் இது ஒரு Quiz Master. இந்த இணையத்தளத்தின் மற்ற பக்கங்கள் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் பயனுள்ளது. 



http://www.kidthing.com/ – இந்த இணையத்திற்கு செல்லுங்கள் , குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுக்கள், அறிவை வளர்க்கும் கேள்வி பதில், கற்பனை திறனை வளர்க்கும் போட்டிகள் எல்லாம் உண்டு. இதை நீங்கள் உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அவற்றில் சில இங்கே,http://www.tamilvu.org இதில் தமிழ்நாட்டினை விட்டுவெளியே வசிக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க என்று மழலைக்கல்வி எனும் பகுதி உள்ளது.அழகான அனிமேஷன் எழுத்துகளும் ஒலிஅமைப்பும் கூடிய இப்பகுதி எளிதாக தமிழ்படிக்க குழந்தைகளுக்கு உதவும். 


http://wwww.pbskids.com --/ -- விதவிதமான தொலைக்காட்சி காரெக்டர்களுடன் விளையாட்டும் கற்றுக்கொள்வதற்குமான தளம்.உதாரணத்திற்கு Between the lions இதில் word play, alphabet soup ,A.B.Cowபோன்றவற்றால் விளையாட்டாய் ஆங்கிலம் கற்கலாம். 


www.little-g.com -- little fingers software இதை நம் கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டு விளையாடலாம். இதிலும் ஆங்கிலத்தின் ஆரம்ப நிலைகளை படிக்கலாம். 

http://www.sanford-artedventures.com/ -- வரைய சொல்லிக் கொடுப்பதுடன் விளையாட்டும் வரைபடங்களின் தியரியும் உள்ளது. 


http://www.dreezle.com/ - இது எல்லா கணினியிலும் கிடைக்கும் பெயிண்ட் ப்ரஷ் போலத்தான் ஆனால் சில மாற்றங்களுடனான இத்திரையில் வரைவது இன்னும் எளிது , இது மவுஸ் கண்ட்ரோல் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு உதவும். மற்றும் கற்பனைத் திறனை வளர்க்க .

http://www.suzyque.us/index.htm -- இந்தத்தளத்தில் worksheets பகுதி நன்றாக இருக்கிறது. வீட்டிலேயே தாய் சொல்லிக்கொடுப்பதற்காக அழகான விளக்கங்களுடன் இன்னும் சில arts and crafts என்று ஒரு வெர்ச்சுவல் பள்ளிக்கூடம்.

1 comment:

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete